மயிலாப்பூர் இதிகாசம்

முனைவர் சாரதா நாராயணன்

மொழிபெயர்பு:  திருநின்றவூர் ரவிக்குமார் 

Author Note: “ThiruMayilai : The Itihasa of Mylapore”, English version of the article is available here.


மெட்ராஸ் பிறந்த கதை

நீண்ட காலமாக மெட்ராஸ் என்று வழங்கப்பட்டது தமிழகத்தின் தலைநகர். 1996 இல் மாநில அரசு அதன் பெயரை சென்னை என்று மாற்றியது. இந்த நகரம் பாரம்பரிய உணவு வகைகளுக்கும் பரதநாட்டியத்திற்கும் பட்டுத்துணிகளுக்கும் புகழ்பெற்றது.

ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் அவர்களுடைய தென்னிந்தியாவின் நிர்வாக தலைநகராக இருந்த மெட்ராஸ் தேச விடுதலைக்குப் பிறகு நவீன நகரமாக சில ஆண்டுகளில் உருமாறியது. தென்சென்னையில் கபாலீஸ்வரர் கோயிலை மையமாகக் கொண்டுள்ள மயிலாப்பூர் இந்நகரத்தின் பண்பாட்டுத் தலைநகராக இன்றும் தன் முக்கியத்துவத்தை தக்கவைத்துள்ளது. கோவிலை சுற்றியுள்ள மாட வீதிகளில் உள்ள கடைகளில் தங்க நகைகளும் பட்டாடைகள், பூஜைக்கான வாசனைப் பொருட்கள், பூஜை பாத்திரங்கள் , வீட்டு உபயோக பாத்திரங்கள் என அங்கு இல்லாத பொருட்களே இல்லை எனும்படி அனைத்து பொருட்களும் விற்கப்படுகின்றன.
நாயக்க மன்னர்களிடம் இருந்து ஆங்கிலேயர்கள் இந்நகரம் பகுதியை 1639 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் நாள் விலை கொடுத்து வாங்கினர் . அதன் நினைவாக ஆண்டுதோறும் துடிப்புள்ள இந்நகரத்தின் பிறந்தநாள் மெட்ராஸ் வாரம் என்று கொண்டாடப்படுகிறது. 1 ஆங்கிலேயர் வருகைக்கு முந்தைய வரலாறு எப்படியோ பொதுமக்கள் நினைவில் இருந்து மறைந்துவிட்டது. இது ஏன் என்றும் , ஏன் ஆங்கிலேயர் வருகையுடன் இந்த நகரத்தின் வரலாறு தொடங்க வேண்டும் என்றும் சிலர் மனதில் கேள்வி எழுவது தவிர்க்க இயலாதது.

முதலாவதாக, இந்த வணிக மையத்தை ஐரோப்பியர்கள் தேர்வு செய்தது ஏன்? இந்த நகரைக் கைப்பற்ற போர்ச்சுக்கீசியர்கள்பிரெஞ்சுக்காரர்களும் டச்சுக்காரர் களும் அரேபியர்களும் ஆங்கிலேயர்கள் பல போர்களை மேற்கொண்டது ஏன்?பழைய மயிலை துறைமுகம் பற்றியும் அதன் மூலம் இந்தோனேசியா வரை இருந்த தொடர்புகள் பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் அண்மைக்கால வரலாற்று நூல்களில் எந்த குறிப்பும் இல்லாதது வியப்பளிக்கிறது. 

தொன் மயிலை 

திரு முத்தையா சென்னை பற்றிய வரலாற்று நிகழ்வுகளை காலவரிசைப்படி தொகுத்தவர்களில் முக்கியமானவர். போர்ச்சுகீசியர்களின் வருகைக்கு முன்பு ஒரு நூற்றாண்டு காலமாக மயிலாப்பூர் துறைமுகத்தின் மூலம் கிழக்கிந்திய தீவுகளுக்கு வர்த்தகம் நடைபெற்றது. துறைமுகப் பகுதியாக இருந்த மயிலாப்பூரை கடற்கரையிலிருந்து இப்போதுள்ள நிலப்பகுதிக்கு தள்ளியவர்கள் போர்ச்சுகீசியர்கள் என்று அவர் எழுதியுள்ளார் எழுதியுள்ளார்.2 

1964 ல்அப்போதைய மாநில அரசு திரு எம் சுப்பிரமணியபிள்ளை என்ற வரலாற்றாளரும் தமிழ் அறிஞருமானவரை  கொண்டு சென்னை மாவட்டத்தில் உள்ள கோவில்கள் பற்றி ஒரு நூலை வெளியிட்டுள்ளது . அதில் அப்போதைய முதல்வரான திரு. எம். பக்தவச்சலம் தன் முன்னுரையில், கோவில்கள் இளம் தலைமுறையினருக்கு நம்முடைய வரலாறு, பண்பாடு பற்றிய அறிவைப் புகட்டுபவை என்று குறிப்பிட்டுள்ளார்.

“நமது நட்டிலுள்ள திருக்கோவில்கள் சமயச் சின்னங்கள் பட்டுமல்ல; வழிபாட்டுக்குரிய திருத்தலங்களாக விவங்குவதோடு, இலக்கியம், வரலாறு, கட்டிதக் கலை, சிற்பம் முதலிய பல்வேறு துறைகளுக்கும் தொடர்புடையனவாக அவை விளங்குகின் றன. ஆலயங்களைப் பற்றி நாம் விவரமாக அறியும்போது அவற்றின் பழைய வரலாறு, பண்பாடு, நாகரிகம் முதலியவைகளை உணர்ந்து கொள்ள நமக்கு வாய்பு ஏற்படுகின்றது.” ( முன்னுரை  –  எம். பக்தவத்சலம் 1-11-1963)

அந்த நூல், மைல்-ஆர்ப்பு  என்ற பெயரின் மூலம் அந்தப் பகுதியில் மயில்கள் நிறைந்து இருந்தன என்பதும் மயிலாப்புல்லா, மயிலை, மயிலாபுரி  என்று பல்வேறு பெயர்களில் வழங்கப்பட்டது என்றும் தெரிவிக்கிறது.

மயிலை துறைமுகம் மூலம் கடல் வாணிபம் நடைபெற்றது என்பதும் பிற்காலத்தில் அது திருமயிலை, மயிலாப்பூர் என்றும் வழங்கப்பட்டது என்றும் இது பழமையான, புகழ்மிக்க, துடிப்புள்ள நகரம் என்றும் முதல் நூற்றாண்டில் அலெக்சாண்டர் உடன் வந்த தளபதிகளின் கிரேக்க குறிப்புகளிலிருந்து நமக்கு தெரியவருகிறது.

“திருமயிலாப்பூர் என்பது சென்னை மாவட்டத்தின் கடற்கரைப் பகுதியில் தெற்கோரம், அடையாற்றுக்கு வடக்கே இருக்கிறது. அப் பகுதியில் மயில்கள் மிகுதியாக இருந்து ஆர்ப்பெருத் திருந்தகாரணத்தால் இப்பதி மயில் ஆர்ப்பு, என்று பெயர் பெற்றது. “மயிலார்ப்பு” என்பது “மயிலாப்பு” என்ன்ப்பட்டு, தேவாரத்தில் “மயிலாப்புள்ளே” என்று வழங்குவதாயிற்று. அதுதான் இன்று மயிலாப்பூர், மயிலை என்று வழங்கப்பெறுகிறது.” (page 89)

“இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இங்கே வந்த கிரேக்க ஆசிரியர் தாலமீ என்பவர் மல்லியாபா (Malliarpha) என்று இவ்வூரைக் குறிப்பிடுகிறார். திருவள்ளுவ நாயனுருடய நண்பர் ஏலேலசிங்கர் இங்கிருந்துதான் பெரிய கப்பல் வணிகம் செய்தார். திருமங்கையாழ்வார் திருவல்லிக்கேணியைப் பற்றிப் பாடும்  போது, “தேனமர் சோலை மாடமா மயிலைத் திருவல்லிக்கேணி” என்று திருவாய் மலர்ந்தருள்கின்ரார்.”     (page 90) Note 3

மயிலை க்கு மயிலம், மயிலடி, மயிலை,  மைலாப்பூர் என்று பல பெயர்களில் வழங்கப் பட்டதாக திரு என் மகாலிங்கம் எழுதியுள்ளார். தமிழகத்தின் தென்பகுதியில் உள்ள மயிலாடுதுறை தென்மயிலை என்றும் சென்னையில் உள்ள மயிலை தொன்மயிலை என்றும் அறியப்படுகிறது. 

டாக்டர் நா. மகாலிங்கம் அவர் அருட்செல்வர் : Note 4

“மயிலையின் மாண்பைக் கயிலைக்கு ஒப்பிடுகிறார்கள். மயிலையே கயிலை, கயிலையே மயிலை எனச் சைவ உலகில் கயிலாயத்துக்கு ஒரு பெருமை தரப்பட்டுள்ளது . அந்தக் கயிலையை மயிலையிலேயே தரிசிக்கலாம்.பயன்பெறலாம் என்பது அந்தத் தொடரை உருவாக்கியவர்களின் கருத்தாக இருக்க வேண்டும். மயிலம். மயிலாடு, மயிலாடுதுரை, மயிலாப்பூர் முதலான ஊர்கள் மயிலோடு தொடர்பு உடையவை. மயில்கள் ஆர்ப்பரிக்க வேண்டுமானால் மேகங்கள் வேண்டும். மேகங்கள் தவறாத மழைக்கும் மண்ணின் வளத்துக்கும் குறியீடு. ஆகவே மயிலோடு தொடர்புடைய ஊர்கள் பெருடிய வளத்தோடு தொடர்புடைய ஊர்களாகும்.” (page 13-14)

“திருமயிலையில் வாயிலார் என்று நாயநார் வாழ்ந்தார். அவர் தம் மனத்தையே கோவிலாக்கி அகவழிபாடு  மட்டுமே செய்து சிவயோக சாதனையில் நின்று முக்தியடைந்தார்.  மயிலை பக்தர்கள் சித்தர்கள் வாழ்ந்த தலம். பன்னிரு மாதங்களும் விழா நடக்கும் தலம். அறுப்பத்துமூன்று நாயன்மாரும் திருவிழாவாகக்காணும். தலைமைத் தலமும் இதுவே. இன்றைய திருமயிலைக்கோயில் இடம் பெயர்ந்த கோயில். கடற்கரைப் பக்க்மாக இருந்த கோயில்கள் இருநூறு ஆண்டுகளுக்கு முன் பிரஞ்சு ஆங்கிலேயர் ஆட்சிக் காலங்களில் தகர்க்கப்பட்டன. வெறிடங்களில் கோயிலைக் கட்டிக்கொண்டபோது அந்த அட்சியாளர்கள்  நல்லவெளையாகக் க்றுக்கிடவில்லை. காரைக்கால் கயிலாயநாதர், புதுச்சேரி வேதபுரீசர், மயிலை கபாலீச்சரம் என்றும் ஆலயங்கள் அப்படிப்பட்டவை. ஆனந்தரங்க  பிள்ளை நாட்குறிப்பு முதலியவற்றிலிருந்து இச்செய்திகள் நமக்குத் தெரியவருகின்றார்.” (page 14) 

பழங்காலத்தில் கடலோரத்தில் இருந்த மூன்று முக்கிய கோயில்கள் கடந்த சில நூற்றாண்டுகளுக்கு முன்பு மீண்டும் கட்டப்பட்டுள்ளன. காரைக்காலில் உள்ள கயிலை நாதர் கோயில், புதுச்சேரியில் உள்ள வேதபுரீஸ்வரம், மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரம்.

மயிலாப்பூரில் மாதம்தோறும் திருவிழாவென உயிரோட்டத்துடன் உள்ளது கபாலீஸ்வரம். மயிலாப்பூரில் உள்ள புதிய கோவில் பல உற்சவங்கள் ,பண்பாட்டு நிகழ்வுகள் என அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறதென ஆனந்தரங்கம் பிள்ளை எழுதியுள்ளார்.

ஜே. மோகன் அவர் அருட்செல்வர்: Note 5

“உலகின் தின்மையாந நாகரிகங்களில் சிறப்புடன் விளங்குவது தமிழர்தம் நாகரிகமாகும். தமிழர்தம் பண்பாடும் நாகரிகமும் தெய்விகம் சார்ந்ததாகும். இம்மண்ணில் தெய்வத்தின் இருப்பிடமாக விளங்கும் நாடும் நகரங்களும் தனிச் சிறப்புடன் போற்றப்படுகின்றன். அவ்வகையில் தொன்மைகாலம் முதலே சிறப்புடன் விளங்கி வரும் பெரு நகரம் மயிலாப்பூர்.

பல்லவர்களின் கடற்கரைப் பட்டினமாக விளங்கிய இபட்டினம் அயல்நாட்டிப் பயணிகளால் சிறப்புடன் குறிக்கப் பட்டுள்ளது. இதன் பழஞ் சிறப்புடன் தொன்றுதொட்டு பெற்றுள்ள சிறப்பையும் போற்றிச் சுந்த்ர மூர்த்தி சுவாமிகள் தொன்மயிலை என்று போற்றியுள்ளார். 

காவிரியாற்றின் கரையில் அமைந்துள்ள  மயிலாடுதுறையும் புராணங்களில் மயிலை என்றே அழைக்கப்பட்டது. அதைத்திசைச் சிறப்பு கரிதித் தென்மயிலை என்று அழைக்கின்றார்.”(page 35)

பழங்காலத்திலிருந்தே மயிலை செல்வ செழிப்புள்ள, நாகரீகமான நகரமாக மட்டுமன்றி புனித யாத்திரைத் தலமாகவும் விளங்கியது என்கிறது திரு ஜெ. மோகன் எழுதியுள்ள திருமயிலைத் தலபுராணம்.5 இத்தளத்தில் பார்வதிதேவி ‘மயில்’ வடிவில் சிவபெருமானை வழிபட்டதால் இது புனிதத்தலம் என்றும் மயில் வடிவம் பற்றி மயிலை என்றும் போற்றப்படுகிறது. பல்லவ மன்னர்கள் கடலோரத்தில் கபாலீஸ்வரருக்கு கோவில் எழுப்பியது பற்றிய பல குறிப்புகள் திருமுறையில் உள்ளன.

சென்னை மெரினா கடற்கரை உலகிலேயே மிக அகலமான கடற்கரையில் ஒன்றாக இருப்பதால் அங்கு கப்பல் கட்டுதளங்களும் வணிக கிடங்குகளும் கணக்காளர் அலுவலகங்களும் இருந்திருக்கலாம். கோவில் கோபுரத்தின் மீது ஏற்றப்பட்ட விளக்கு கலங்கரை விளக்கமாக , கப்பல்களுக்கு வடபகுதியில் ஒதுங்க வேண்டுமென வழிகாட்டியாகவும், இருந்திருக்கும்.

போர்ச்சுகீசியர்கள் முதலாய் தொடர்ந்து வந்த ஐரோப்பியர்களுக்கு மயிலை துறைமுகத்திற்கு வடக்கே துறைமுகத்திலிருந்து ஆந்திரா வரையிலான நீண்ட கடற்கரை பகுதி தங்களுடைய வணிகத்தலங்களை அமைக்க வசதியாக இருந்திருக்கும். தெற்கிலுள்ள அடையாறு முகத்துவாரம் போக்குவரத்துக்கும் மக்களின் பயணத்திற்கும் நிச்சயம் பயன்பட்டிருக்கும் ‌.

சைவசமய குரவரான ஞானசம்பந்தர் ஏழாம் நூற்றாண்டில் இக்கோயிலுக்கு வந்துள்ளார். பதினைந்தாம்  நூற்றாண்டில் வருகை தந்துள்ள  அருணகிரிநாதர் கடலோரத்தில் அமைந்துள்ள இக்கோயில் பற்றி வர்ணித்துள்ளார். அப்போது கோவில் இப்போதைய சாந்தோம் தேவாலயத்துக்கு அண்மையில் இருந்துள்ளது. ஞானசம்பந்தர் காலத்தை சேர்ந்த வரும் அவருடைய முதிய சகாவுமான திருநாவுக்கரசர் சுவாமிகள் மயிலையிலிருந்து திருவொற்றியூருக்கு கப்பலில் பயணித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மயிலை மாநகரம் கடலோரத்தில் அமைந்திருந்ததாக பெரியபுராணம் கூறுகிறது . மயிலை பற்றிய பழமையான குறிப்பு தமிழ் இலக்கியமான திருமுறையில் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஞானசம்பந்தரின் பதிகத்தில் (2.47) காணப்படுகிறது. வேறு எந்த நகரமும் இவ்வளவு சிறப்புடன் அவர் பாடல்களில் குறிப்பிடப் படவில்லை என்பது சுவாரஸ்யமான விஷயமாகும்.

திருஞானசம்பந்தர் என்று மதிப்புடன் போற்றப்படும் இவர் குழந்தையாக இருந்தபோதே ஞானம் பெற்றவர் . மூன்று வயதில் சிவபெருமான் பற்றி பாடல் இயற்றியவர். இவருக்கு சிவனும் பார்வதியும் நேரில் காட்சி தந்து ஆசி அளித்தார்கள் என்று சொல்லப்படுகிறது. தமிழ் இசைக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் புத்துயிர் ஊட்டிய இவர், குமாரக் கடவுளின் மறு அவதாரமாக கருதப்படுகிறார்.

இவர் தமிழகத்தில் 125 சிவன் கோயில்களுக்குச் சென்று அங்கு இறைவனை துதித்து பாடல்கள் பாடினார் . அவை ‘பாடல் பெற்ற தலங்கள்’ என்று  புண்ணியத் தலங்களாயின. இவரது வருகையை கவுரவிக்கும் விதமாக அந்த ஊர்கள் ‘திரு’ என்று அடைமொழி பெற்று திருமுறை பாடல் தொகுப்பில் இடம்பெற்றன. சென்னை சுற்றுவட்டாரத்தில் பல பாடல் பெற்ற ஸ்தலங்கள் உள்ளன. திருவான்மியூர், திருமயிலை, திருவொற்றியூர் (இது வட சென்னையில் உள்ளது) போன்றவற்றை எடுத்துக்காட்டாக கூறலாம்.

மயிலைக்கு அருகில் சிவநேசச் செட்டியார் என்ற சிவ பக்தர் வாழ்ந்து வந்தார். அவர் செல்வந்தர். சிறந்த வணிகர். கபாலீஸ்வரர் கோயிலுக்கு அருகில் அவரது இல்லம் இருந்தது. அவர் ஞானசம்பந்தர் ஓரியூரில் இருந்து மயிலை வரும்போது அவருக்கு பல்லாக்கு பரிவாரங்களையும் உணவு ஏற்பாட்டையும் செய்து வந்தார்.

சிவநேசருடைய மகள் நாகம் தீண்டி இளம் வயதிலேயே இறந்து விட்டாள். இது சிவநேசருக்கு தாள துயரம் அளித்தது. அவர் அவளது அஸ்தியை கலத்தில் இட்டு பாதுகாத்து வந்தார். ஞானசம்பந்தர் வந்தபோது அவரிடம் துயரக் கதையை கூறி அழுதார். மனம் நெகிழ்ந்த ஞானசம்பந்தர் ‘மட்டிட்ட புன்னையங்’ என்ற தொடங்கும் பதிகத்தை இயற்றிப் பாட அனைவரும் காணும்படியாக அஸ்தியான பெண் உயிருடன் எழுந்து வந்தாள். இதை பெரியபுராணம் நெஞ்சம் நெகிழும் படியாக  அழகாக விவரிக்கிறது.

ஆண்டு முழுவதும் இக்கோயிலில் நடக்கும் திருவிழாக்களை விவரித்து இவற்றைக் காணாமல் பூம்பாவை (அந்த பெண்ணின் பெயர்) போகலாமா என்று கேட்கும் விதமாக அப்பாடல்கள் அமைந்துள்ளன. கலோபிலம் இனோபிலம்  என்ற தாவரவியல் பெயர் கொண்ட புன்னைமரம் கபாலீஸ்வரத்தின்  தல விருட்சமாகும். கடலோரங்களில் செழித்து வளரக்கூடிய இத்தாவரம் பாரத நாடு எங்கும் வளர்க்கப்படுகிறது. அலெக்ஸாண்டரியன் டாரெல் என்றும் அறியப்படும் இந்த மரம் பெரிய ,நீர் வட்டமான, அடர்பச்சை நிற இலைகளையும் வாசனை மிகுந்த வெள்ளை நிற மலர் கொத்தையும் பழுப்பு நிறத்தில் உருண்டையான காய்களையும் கொண்டது. இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இந்த மரம் நோய்களை குணப்படுத்துவது போல சிவனும் நம் பிறவி நோயை குணப்படுத்துகிறார். எனவே சிவபெருமான் புன்னை வன நாதர் ஆக இத்தலத்தில் வணங்கப்படுகிறார்.

மயிலை பற்றிய திருஞானசம்பந்தரின் பாடல்களை, திருமுறை- 2.47- மட்டிட்ட புன்னையங்- ஓதுவார் திரு. பா. சற்குருநாதன் இங்கு பாட கேட்போம்.6

திரு.பா. சற்குருநாதன் தஞ்சாவூரிலிருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கருக்கடிபட்டி என்ற கிராமத்தில் பள்ளி ஆசிரியரின் மகனாகப் பிறந்தவர். உயர்நிலைப்பள்ளியில் படிக்கும்போதே அவருக்கு இருந்த இசை நாட்டத்தால் வி எஸ் அறக்கட்டளை சிதம்பரத்தில் நடத்தி வந்த தேவாரப் பாடசாலையில் சேர்ந்தார். தொழிலதிபர் திரு ஏ சி முத்தையா அந்த அறக்கட்டளையின் நிறுவனர். 

பிறகு திருவாவடுதுறை மடத்தைச் சேர்ந்த திரு . டி .சோமசுந்தர தேசிகரிடம் மாணவராகி தேவாரமும் தமிழிசையும் கற்றார். அதன்பிறகு சென்னையில் உள்ள திரு. வி. அச்சுதராயன் என்ற குருவிடம் முறைப்படி கர்நாடக இசை பயின்றார். கபாலீஸ்வரர் கோவிலில் 98 முதல் அதிகாரபூர்வமாக ஓதுவாராக உள்ளார். இவர் அகில இந்திய வானொலியில் முதல்தர இசைக் கலைஞராக அங்கீகரிக்கப்பட்டு உள்ளார். shaivam.org சார்பில் எல்லா திருமுறைகளையும் பாடி ஒலித்தட்டு வடிவில் வெளியிட்டுள்ளார். 


மட்டிட்ட புன்னையங்  கானல் மடமயிலைக்

கட்டிட்டங் கொண்டான், கபாலீச்சரம் அமர்ந்தான்

ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல்கணத்தார்க் 

கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய் 1

கடலோர மயிலையில் அமுதம் பொழியும் புன்னைமர சோலையில் அமைந்திருக்கும் கபாலீஸ்வரத்தில் மகிழ்வுடன் சிவபெருமான் அமர்ந்திருக்கிறார். ருத்திர்களும் மனித வடிவில் சிவகணங்களும் (பக்தர்கள்) வந்து பிரசாதம் மேற்கொள்ளும் அழகிய காட்சியை காணாமல் போவாயோ பூம்பாவையே!

மைப்பயந்த  ஓண்கண் மடநல்லார் மாமயிலை 

கைப்பயந்த நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்

ஐப்பசி ஓண விழாவும் அருந்தவத்தவர்கள்

துய்ப்பனவுர் காணாதே போதியோ பூம்பாவாய் 2

மையிட்டு ஒளிபொருந்திய கண்களை உடைய பெண்கள் இருக்கும் மயிலையில் உடலெங்கும் திருநீறு பூசிய சிவபெருமான் மகிழ்வுடன் அமர்ந்திருக்கிறார். இங்கு கொண்டாடப்படும் ஐப்பசி ஓண திருவிழாவை காண முனிவர்களும் தவம் இருப்பார்கள். அப்படிப்பட்ட திருவிழாவை பார்க்காமல் போவாயோ, பூம்பாவாய்! 

வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில்

துளக்கில் கபாலீச் சரத்தான் தொல் கார்த்திகை நாள் 

தளத்தேந் திளமுலையார் தையலார் கொண்டாடும்

விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய் 3

வளையல்கள் ஒலி எழுப்பும் கைகளை உடைய பெண்கள் உள்ள பரந்த மயிலை நகரில் திடமுடன் அமர்ந்திருக்கிறார் கபாலீஸ்வரர். இங்கு கார்த்திகைத் திருவிழாவின்போது இளம்பெண்கள் மாலைப்பொழுதில் விளக்கு ஏற்றுவதை காணாமல் போவாயோ, பூம்பாவையே!

ஊர்திரை வேலை யுலாவும் உயர்மயிலை

கூர்தரு வேல் வல்லார் கொற்றம் கொள் சேரி தனில்

கார்தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்

ஆதிரை நாள் காணாதே போதியோ பூம்பாவாய் 4

அலைகடல் வீசும் கடலோரம் மயிலையில் கூரிய வேலாயுதத்தை திறம்பட வீசும் வீரர்கள் நிறைந்து உள்ளார்கள். மழை மேகத்தை வரவழைக்கும் அடர்ந்த சோலையில் கபாலீஸ்வரன் அமர்ந்துள்ளான். அங்கு நடக்கும் திருவாதிரை திருநாள் விழாவை காணாமல் போவாயோ உன் பூம்பாவையே! 

மைப்பூசும் ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்

கைப்பூசு நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான் 

நெய்ப்பூசு மொண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடும் 

தைப்பூசம் காணாதே போதியோ பூம்பாவாய் 5

மை பூசிய, ஒளிபொருந்திய , கண்களை உடைய பெண்கள் வரிசையாக கூடி நிற்கும் மயிலையில் கைகளில் திருநீறு பூசிய கபாலீஸ்வரன் வீற்றிருக்கிறான். அங்கு பெண்கள் நெய் பொங்கலிடும்  தைப்பூச திருவிழாவை காணாமல் போவாயோ பூம்பாவையே!

மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக் 

கடலாட்டுக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்

அடல்ஆனே றூரும் அடிகளடி பரவி

நடமாடல் காணாதே  போதியோ பூம்பாவாய். 6 

விரிந்துயர்ந்த தென்னை மரங்களைக் கொண்ட மயிலையில் மாசித் திருவிழாவின்போது கடலில் நீராடி, கபாலீஸ்வரத்தில்  காளை மீது அமர்ந்த இறைவனின் கமலப்பாதத்தை  வணங்கும் பக்தர்களை பார்க்காமல் போவாயோ பூம்பாவையே!

மலிவிழா வீதி மடநல்லார் மாமயிலைக் 

கலிவிழாக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்

பலிவிழாப் பாடல்செய் பங்குனி உத்திரநாள்

ஒலிவிழாக் காணாதே போதியோ பூம்பாவாய். 7

மயிலை நகர வீதிகளில் கூடும் பெண்கள் பங்குனி உத்திரத் திருவிழாவின் போது பாடும் இனிய இசையைக் கேட்காமல் போவாயோ பூம்பாவையே! 

 இன்றும் கபாலீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவத்தின் பத்தாம் நாள் பங்குனி உத்திரத் திருவிழா நடைபெறுகிறது. 

தண்ணா அரக்கன் தோள் சாய்ந்துகந்த தாளினான்

கண்ணார் மயிலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்

பண்ணார் பதினெண் கணங்கள்தம் அட்டமி நாள்

கண்ணாரக் காணாதே போதியோ பூம்பாவாய் 8

அரக்கன் இராவணன் கயிலை மலையை தூக்கிய போது தன் தாமரை பாதத்தால் அவன் தோள்கள் நெறிபட அழுத்திய சிவனார் மகிழ்வுடன் கபாலீஸ்வரத்தில் குடிகொண்டுள்ளார். அங்கு 18 வகையான இசைக் குழுக்களாக பக்தர்கள் அட்டமி திருநாளன்று ஆடிப்பாடி இறைவனே மகிழ்விப்பார்கள். காதுகளுக்கு விருந்தாகும் அந்த இசையை கேட்காமல் போவாயோ பூம்பாவாயே!

நற்றாமரைக் மலர்மேல் நான்முகனும் நாரணனும்

உற்றாங்  குணர்கிலா மூர்த்தி திருவடியைக்

கற்றார்கள் ஏத்துங் கபாலீச்சரம் அமர்ந்தான்

பொற்றாப்பு காணாதே போதியோ பூம்பாவாய் 9

நல்ல தாமரை மலர் மீது அமர்ந்திருக்கும் நான்கு முகங்களைக் கொண்ட பிரம்ம தேவரும் விஷ்ணுவும் காணமுடியாத சிவபெருமான் கற்றவர்கள் போற்றும் படியாக கையிலை கபாலீஸ்வரத்தில் அமர்ந்துள்ளார். அங்கு நடக்கும் பொன் ஊஞ்சல் திருவிழாவை காணாமல் போவாயோ, பூம்பாவையே!

உரிஞ்சாய வாழ்க்கை அமணுடையைப் போர்க்கும் 

இருஞ்சாக் கியர்கள் எடுத்துரைப்ப நாட்டில்

கருஞ் சோலை சூழ்ந்த கபாலீச்சரம் அமர்ந்தான்

பெருஞ் சாந்தி காணாதே போதியோ பூம்பாவாய். 10

ஆடை உடுத்தாமல் அம்மணமாகத் திரியும் அமணர்களும் ( சமண சமயத்தினர்) வேதம் மறுக்கும் இருள் மனம் கொண்ட சாக்கியர்கள் (புத்த மதத்தினர்) உள்ள இந்த மண்ணில் அடர்ந்த சோலைகள் கொண்ட கபாலீஸ்வரத்தில்  சிவபெருமான் மகிழ்வுடன் அமர்ந்திருக்கிறான் . திருவிழாவின் இறுதியில் நடக்கும் முழுக்காட்டு விழாவை காணாமல் போவாயோ பூம்பாவாய்! 

இத்திருவிழா ஆனி -ஆவணி மாதத்தில் (ஜூலை -ஆகஸ்ட்) இன்றும் நடக்கும் பவித்ரோட்சவத்தைக்  குறிப்பிடுகிறது.

கானமர் சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்

தேனமர் பூம்பாவைப்  பாட்டாக செந்தமிழான்

ஞானசம்பந்தன் நலம் புகழ்ந்த பத்தும்வல்லார்

வான் சம்பந்தத் தவரோடும் வாழ்வாரே. 11

காடு போல அடர்ந்த சோலைகளை உடைய கபாலீஸ்வரத்தில்  அமர்ந்த சிவபெருமான் பற்றி தேனினும் இனிய பூம்பாவை குறித்து செந்தமிழ் வல்ல ஞானசம்பந்தன் பாடிய மேற்கண்ட பத்து பாடல்களை ஓதுபவர்கள் தேவர்களுக்கு இணையான பேரின்பம் பெற்று வாழ்வார்கள்.

மயிலாப்பூர் சிவன் கோயில் 

தற்போது மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவில் சுமார் 350 ஆண்டுகளாக சென்னையின்  பண்பாட்டு மையமாக இருக்கிறது. இது ஞானசம்பந்தரும் மற்ற நாயன்மார்களும் பாடிய கோயில் அல்ல. இது கோயிலின் அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் கூறப்பட்டுள்ளது. 7

சென்னையில் போர்ச்சுகீசியர் வரலாறு 

1516ம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியர்களும் டச்சுக்காரர்களும் வந்தார்கள் . (மயிலை) துறைமுகத்திலிருந்து மெரினா  வரை இருந்த கடற்கரை பகுதியில் விரிவாக குடியேறினார்கள். அங்கிருந்த இந்தியர்களின் வீடுகளையும் கோவில்களையும் தகர்த்தெறிந்தார்கள். அவர்களுக்குப் பின் வந்த ஆங்கிலேயர்களும் அதை அடியொற்றி நடந்தனர்.

“Mylapore fell into the hands of the Portuguese in A.D.1566, when the temple suffered demolition. The present temple was rebuilt 300 years ago. There are some fragmentary inscriptions from the old temple, still found in the present Shrine and in St. Thomas Cathedral.”  

ஐரோப்பியக் குடியிருப்புகள் விரிவாக்கம் அடைய கடலோரத்தில் இருந்த மயிலை அங்கிருந்து உள்நோக்கி நிலப்பகுதிக்கு நகர்த்தப்பட்டது. ஐரோப்பியர்கள் பகுதியை சுற்றி கட்டப்பட்ட மண் சுவற்றுக்கு அப்பால் தள்ளப்பட்ட ‘கருப்பர்கள்’ என்று அவர்களால் அழைக்கப்பட்ட பூர்வகுடிகளின் பகுதிக்கு போனது மயிலை.

“There were Portuguese settlements in and around Mylapore. The Luz Church in Mylapore, Madras (Chennai) was the first church that the Portuguese built in Madras in 1516. Later in 1522, the São Tomé church was built by the Portuguese. They had also looted the treasures and destroyed the original Kapaleeswarar Temple.”  

போர்ச்சுக்கீசியர்கள் தீவிர மத மாற்றத்தில் ஈடுபட்டனர். பூர்வகுடிகளிடம்  மிகவும் கொடூரமாக நடந்து கொண்டனர். மதத்தின் பெயரால் அவர்கள் உள்ளூர் மக்கள் மீது நடத்திய கொடுமைகளைப் பற்றியும் இடித்துத் தகர்த்த கோவில்களின் பட்டியலையும் கோவாவில் கோவில்களை இடித்து தேவாலயங்கள் கட்டியது பற்றியும் திரு.ஏ கே பிரியோல்கர் தனது கோவா விசாரணை (The Goa Inquisition) என்ற நூலில் (பக்கம் 69 -70 ) குறிப்பிட்டுள்ளார்.

16ஆம் நூற்றாண்டின் மத்தியில் அவர்கள் பழைய கபாலீஸ்வரர் கோவிலை இடித்து தள்ளி அதன் செல்வத்தை சூறையாடினர்.  பிற்காலத்தில் போர்ச்சுகீசியர்களுடன் கோவாவிலும் மயிலையிலும் ஒரே நேரத்தில் போரிட்டு விஜயநகர நாயக்க மன்னர்கள் வெற்றி பெற்றனர். அதன் பிறகு அவர்கள் பழைய கோவிலின் தூண்கள் சிலவற்றை பயன்படுத்தி புதிய, தற்போதுள்ள, கோவிலை நிர்மாணித்தனர்.

இப்போதுள்ள கோவிலிலிருந்து நேர்கோட்டில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சாந்தோம் தேவாலயத்தில் பழைய கோவிலின் இடிபாடுகள் இன்றும் உள்ளன. சில கற்தூண்கள்  பரங்கிமலையில் (செயின்ட் தாமஸ் மலையில் ) உள்ள தேவாலய  பள்ளி கட்ட பயன்படுத்தப்பட்டுள்ளன. இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு மெட்ராஸ் நகர வரைபடத்தில் (1814 ஆண்டு) கூட அந்த இடத்திற்கு செயின்ட் தோம் (சாந்தோம்) என்றும் மயிலாப்பூர் என்றும் இரு பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளது.9

எச் டி லவ் என்பவர் தொகுத்துள்ள பழைய மெட்ராஸின் காலடித்தடங்கள் என்ற நூலில் தொகுப்பு 1-ல் அலெக்சாண்டரின் தளபதியாக இருந்ததொலிமி தன் குறிப்பில் மயிலையை ‘மாலையர்பா’ என்று குறிப்பிட்டுள்ளதை திரு கே எம் பாலசுப்பிரமணிய முதலியார் மேற்கோள் காட்டுகிறார். மெட்ராஸை கைப்பற்ற பிரெஞ்சுக்காரர்களுக்கும் அரேபியர்களுக்கும் ( மூர்) பல யுத்தங்கள் நடந்தன. 1672 இல் நடந்த யுத்தத்தின் போது பிரெஞ்சுக்காரர்கள் தற்போது உள்ள கபாலீஸ்வரர் கோயில் கருவறையில் பதுங்கி இருந்தனர். கடலோரத்தில் இருந்த கோவில் பதினாறாம் நூற்றாண்டு மத்தியில் தகர்க்கப்பட்ட பின்பு நூறு ஆண்டுகளுக்குள் தற்போதுள்ள கோயில் கட்டப்பட்டுள்ளது தெரியவருகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு 1923 இல் சாந்தோம் தேவாலய வளாகத்தில் இருந்து பல கல்வெட்டுகளும் சிற்பங்களும் கண்டெடுக்கப்பட்டன. அரசு அதிகாரிகள் அக்கல்வெட்டுக்களை 215 முதல் 223 வரை என இலக்கமிட்டு அருங்காட்சியகத்தில் வைத்துள்ளனர். 215 இலக்கமிட்ட கல்வெட்டு நடராஜர் கோவிலுக்கு விளக்கேற்ற எண்ணெய் அளிக்கும் நிவேதனம் பற்றி கூறுகிறது. எண் 216 ராஜராஜ சோழன் பற்றி உள்ளது. எண் 217 பூம்பாவையின் தந்தை சிவநேசச் செட்டியார் பற்றி குறிப்பிடுகிறது. அவர் அந்த காலத்தில் மிக முக்கியமான வணிகர்களில் ஒருவராக இருந்திருக்கிறார்.

புதிய கோயிலை கட்ட பழைய கோவிலின் கற்கள் பயன்படுத்தப்பட்டு இருந்தாலும் அவை தொடர்ச்சியாக இல்லாமல் மாறி மாறி இருப்பதால் கல்வெட்டின் செய்தியை நாம் காலவரிசைப்படி அறியமுடியவில்லை. மயிலாப்பூர் துறைமுகம் மற்றும் வணிக நகரமாக இருந்ததால் பல கல்வெட்டு செய்திகள் கோயிலுக்கு பல வணிகர்கள் அளித்த நன்கொடை பற்றிய செய்திகள் உள்ளன.10

திரு. ம. பாலசுப்பிரமணிய முதலியார் அவர்கள் எழுதியவை: 

பழைய கோவிலும் புதிய கோவிலும் – பழைய ஆலயம் இப்போது உள்ள இடத்திலிருந்து அருணகிரிநாதர் காலம்  வரையில் கடற்கரையிலிருந்துது கடலங் கரைதிரையருகேசூழ்  மயிலைப் பதிதனில் உறைவோனே என்று திருபுகழ்ப் பகுதியால் துலங்கும். கி.பி. 1516 -ல் மயிலாப்பூர் போர்த்துக்கேசியர் கையில் சிக்கியது. சில ஆண்டுகளுக்குள் அவர்கள் ஆலயத்தைத் தகர்த்துக் கோட்டையையும் தங்கள் தொழுகைக்கு இடமும் கட்டினார்கள். கி.பி. 1672 க்கு முன்பு இப்போதுள்ள இடத்தில் இப்போதுள்ள ஆலயம் கட்டப்பட்டிருத்தல் வேண்டும். அவ்வாண்டில் பிரெஞ்சுக்காரருக்கும் மூர் துருக்கருக்கும் நடந்த போரில் பிரெஞ்சு சேனயின் ஒரு பகுதி இப்போதுள்ள ஆலயத்தில் பதுங்கியிருந்த செய்தி, மேற்கூறிய Vestiges of Old Madras என்று நூலில் Volume 1, Chap 24, பக்கம் 321,322 ல் காணப்படுகின்றது. Santhome Cathedral சுமார்  40 ஆண்டுகட்குமுன் பழுது பார்க்கப்பட்டது நிலத்தை அகழ்ந்த போது பழைய சிவாலயத்தின் கற்களும் கல்வெட்டுக்களும் கிடைத்தன. அவை அரசாங்கத்தினரால் 215-223/ 1923 என்று குறிக்கப் படுகின்றன.  இவற்றுள் Found on Stone excavated below the Cathedral at Santhome    என்பன போன்றகுறிப்புக்கள் காணப் படுகின்றன. ஒரு கல்வெட்டில் (215 ) கூத்தாடி தேவர்க்கு விளக்கும், மற்றொன்றில் ( 216) முதல் ராஜராஜன் மெய்க்கீர்த்தியும், மற்றொன்றில் (217) பூம்பாவை பற்றிய குறிப்பும் உள்ளன. பழைய கோவிலின் கற்களையும் புதுக் கற்களையும் கொண்டு புது ஆலயம் கட்டப்பட்டது. பழைய கல்வெட்டுப் பகுதி சுமார்  50  கற்களில் அம்மன் கோவில் சுவர்களில் , மேல்கீழ் முன்பின் முறைமாறியும் தொடர்ச்சியின்றியும் அடுக்கப்பட்டுள்ளன. புதிய ஆலயத்தில் சுவாமிஅம்மன் கோயில்களிலும் பிறவற்றிலும்  கருப்பக்கிருகச் சுவர்களில் ஒரு கல்வெட்டு கூட கிடையாது. பழைய கோவில் கற்கள் வரும்போது சில கிறித்தவர்கள் கல்லறைக் கற்களும் தவறி வந்துவிட்டன. அவற்றுள் ஒன்று ஆறுமுகசுவாமி முகமண்டபத் தளவரிசையிலும், மற்றொன்று சநிபகவான் கோயிலுக்கெதிரில் தளவரிசையிலும் உள்ளன.  (pages 433-434)

திரு சுப்பிரமணிய பிள்ளை எழுதியுள்ள சென்னை மாவட்ட கோவில்கள் வரலாறு என்ற நூலில் பழைய கோவில் போர்த்துகீசியர்களால் தகர்க்கப்பட்டது  என்றும்  ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு (1964) சாந்தோம் தேவாலயத்தின் அடியில் பழைய சிவன் கோவில் கற்தூண்களும் சில கற்சிலைகளும் கண்டெடுக்கப்பட்டன என்றும் குறிப்பிட்டுள்ளார். ( பக்கம் 91-92). மயிலாப்பூர் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள ‘திருமயிலை அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோவில்’ என்ற நூலில் மேற்கண்டவை உள்ளது. அந்நூலில் அத்துடன் பழைய கோவில் இருந்த இடத்தில் தான் புதிய கோவில் கட்டப்பட்டது என்றும் இப்போது உள்ள சாந்தோம் தேவாலயம் வரை கடல் உள்வாங்கி சென்றுள்ளது என்றும் பல அறிஞர்கள் கூறுவதையும்  பதிவாகியுள்ளது.

“அருணகிரிநாதர் கி. பி. 1450-ல் இருந்தவர். அவர் இங்கே வந்து சிங்காரவேலவனுக்குத் திருப்புகழ் பாடி வாழ்த்தினுர். திருப்புகழில் அவர் “கடலக் கரைத் தினரயருகே சூழ் மயிலைப் பதிதனில் உறைவோனே” என்று கூறுகிரார். ஆதலின் அவர் காலம் வரையில் கோவில் கடற்கரையிலேயேதான் இருந்தது. கி. பி. 1561-ல் திருமயிலை போர்த்துக்கேசியர் கையில் அகப்பட்டது. அவர்கள் அக்கோவிலைத் தகர்த்துத் தங்களுக்கு ஒரு கோட்டையைக் கட்டிக் கொண்டார்கள் கி. பி. 1672-க்கு முன்பு இப்போதுள்ள கோவில் கட்டப் பெற்றதா தல்வேண்டும். அவ்வாண்டில் பிரெஞ்சுக் காரருக்கும் மூர்துருக்கருக்கும் நடந்த போரில் பிரெஞ்ச்க்காரர் இக்கோவிலில் ஒளிந்திருந்தார்கள், என்பது வரலாறு. செயின் தோம் கிருத்தவர் மாதா கோவில் ஐம்பது ஆண்டுகளுக்குமுன் பழுது பார்க்கப்பட்ட போது அங்கே தரை தோண்டப்பட்டது. பூமியின் கீழே சிவன் கோவில் தூண்களும் கல்வெட்டுக்களும் கண்டெடுக்கப்பட்டன்.”  (page 91-92)

மயிலாப்பூரில் உள்ள தூய தோமாவின் கல்லறை

வரலாற்று ஆவணங்களின் படி இயேசு கிறிஸ்துவின் சீடர்களில் ஒருவராக கருதப்படும் தூய தோமா சிரியா நாட்டு வரை தான் பயணம் செய்துள்ளார். அதை தாண்டி அவர் வந்ததில்லை . ஆனால் தென்னிந்திய திருச்சபையினர்  அவர் தமிழ்நாட்டுக்கு வந்ததாக நம்புகிறார்கள். சில பத்தாண்டுகளுக்கு முன்பு ரோமிலிருந்து போப்பாண்டவர் தூய தோமா இந்தியாவுக்கு சென்றதில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவித்தார் . ஆனால் இந்தியாவிலிருந்து பாதிரிகளின் எதிர்ப்பினால் அந்த அறிவிப்பை பின்வாங்கினார். அதனால் இந்த விஷயத்தில் கிறிஸ்துவ மதத்தின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து குழப்பம் நீடிக்கிறது. 12 

“இப்போதுள்ள கடற்கரையோரக் கபாலீசுவரர் கோயில் கபாலீச்சரம் திருஞானசம்பந்தரால் பாடபட்ட்தன்று.”

“இப்போதுள்ள  கபாலீசுவரர் கோவில் பழைய கோவில் அன்று என்றும், சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட புதிய கோயில் என்றும், பழைய கோயில் கடற்கரையோரம் இருந்த்தாகவும் அது போர்த்துக்கீசியர்களால் அழிக்கப்பட்டதாகவும் வரலாற்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர் என்று பம்மல் சம்பந்த முதலியார் கூறிகிறார்.”  (page 18 – 19)

“பழைய கோவில் இப்போதிருக்கும் சாந்தோம் மாதா கோவில் உள்ள இடத்திலே அல்லது அதன் அருகிலோ இருந்திருத்தல் வேண்டும். நாகப்பட்டிநம் முதல் சென்னை வரையில் இருந்த கோயில்களை எல்லாம் அழித்த போர்த்துக்கீசியர்கள் சாந்தோமில் தங்களுடைய முக்கியமான இடமாகிய செயிண்டதாமஸின் ஆலயத்தக்குள் அருகில் ஓர் இந்து ஆலயத்தை இருக்க விட்டிருக்கமாட்டார்கள்.”   

“இவரே (பம்மல் சம்பந்த முதலியார்) “சிவாலயங்கள் இந்தியாவிலும் அப்பாலும்” என்னும் நூலில் ‘பழைய கோவில் சமுத்திரக்கரையோரம் இருந்தது. போர்த்துக்கீசிரால் இடிக்கப்பட்டதென்று எண்ணுவதற்கிடமுண்டு’ என்று குறிப்பிட்டுள்ளார்.” (page 20)

“…….என்று இ. மு. சுப்பிரமணிய பிள்ளை கூறி, இப்போதுள்ள கோயில், இருந்த இடத்திலேயே திரும்பக் கட்டப்பட்டது என்று விளக்குகின்றார்.

கபாலீசுவர கோயில் இருக்குமிடம் பற்றிய கருத்துகள் இரண்டாகும். முதல் கருத்து, பழைய கபாலீசுவரர் கோயில் சாந்தோம், கடற்கரையருகே இருந்தது, இரண்டாவுது கருத்து இப்போது கோயில் இருக்குமிடத்திலேயே பழைய கோயில் இருந்துது என்பதுமேயாகும்.”

(page 25)

கானா தாமஸ் என்ற வேறொரு நபர் கி பி யின் ஆரம்பகாலத்தில் பாலஸ்தீனத்தில் இருந்து தப்பியோடி கேரள மாநிலம் மலபார் பகுதியில் வந்து சேர்ந்தார். அவர் கேரளத்தில் உள்ள பலரை மதமாற்றம் செய்தார். ஆரம்ப காலத்தில் நடந்த இந்த சம்பவத்தை போர்ச்சுக்கீசியர்கள் பயன்படுத்திக்கொண்டு இயேசு கிறிஸ்துவின் சீடர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு அருகில் தான் புதைக்கப்பட்டார் என்று கூறி,  பதினாறாம் நூற்றாண்டில் அந்த பகுதியை கைப்பற்றினர். அடுத்த சில பத்தாண்டுகளில் அவர்களது வலிமை அதிகரித்தவுடன் கோவிலை இடித்து தகர்த்தனர்.

பதிமூன்றாம் நூற்றாண்டில் மயிலாப்பூருக்கு வந்திருந்த மார்கோ போலோ தூய தோமா பற்றி எதுவும் குறிப்பிடாத மட்டுமன்றி தோமா என்பவர் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏதோ ஒரு கடலோரப் பகுதியில் புதைக்கப்பட்டார் என்று குறித்துள்ளார் . இப்போதுள்ள கிறித்துவ மிஷனரிகள் தூய தோமா- வை  கொன்றது ஒரு பிராமணன் தான் என்று கூறி இந்துயிசத்தின்  மீது வெறுப்பை ஏற்படுத்தி மதமாற்றம் செய்து வருகின்றனர்.13 

பொதுவெளியில் இந்த விஷயங்கள் பற்றியோ மயிலாப்பூரின் பழைய வரலாறு பற்றிய எந்த விபரங்களும் விவாதிக்கப் படுவதில்லை. சென்னையிலேயே பிறந்து வளர்ந்த பலருக்கும் இது பற்றி தெரியவில்லை. சாந்தோம் தேவாலயத்தில் உள்ள அருங்காட்சியகத்திற்கு சென்றுள்ள சிலரும் முன்பு அங்கிருந்த பல சிலைகள் இப்போது அங்கில்லை, அகற்றப்பட்டுள்ளன என்கின்றார்கள்.

மகாபலிபுரத்தில் நடந்ததாக சொல்லப்படுவது போல இங்கும் கோயிலை கடல் கொண்டிருக்கும், கடந்தகாலத்தில் எதுவும் நடந்திருக்கலாம் எனவே எதையும் உறுதியாக சொல்வதற்கு இல்லை, என்ற கருத்தை பலர் பரப்பி வருகின்றனர். வரலாற்றில் முந்நூறு ஆண்டுகள் என்பது மிக நீண்ட காலம் அல்ல. அது மட்டுமன்றி கடல் கொண்டிருந்தால் அது ஒரு முக்கிய நிகழ்வாக நிச்சயம் பதிவு செய்யப்பட்டிருக்கும். 

இந்த விஷயத்தை ஆராய்ந்து தீர்க்க சாந்தோம் தேவாலயத்தை ஒட்டிய கடல் பகுதிகளில் நீரில் மூழ்கி கடல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. அதுமட்டுமன்றி தற்போது சாந்தோம் தேவாலயம் மற்றும் செயின்ட் பீட்ஸ் அகெதமிக்கு பின்புறம் உள்ள நிலப்பகுதி உயர்ந்து காணப்படுகிறது. இது கடல் கொண்ட பகுதியாக இருக்க முடியாது. மாறாக இங்குள்ள கடல் பகுதி குறுகியதாகவும் அடியில் பாறைகள் கொண்டும் கோவில் அமைப்பதற்கு ஏற்றதாகவே உள்ளது. ‘ மல்லியாப்பூர்  கோபுரத்தை’ தகர்த்தது பற்றி போர்ச்சுகீசிய வரலாற்றாளர்களின்  பதிவுகள் தெளிவாக குறிப்பிடுகின்றன.


நூற்பட்டியல் :-

ஸ்ரீ அமிர்தலிங்க தம்பிரான் எழுதிய திருமயிலைத் தலபுராணம் – தமிழ் நூல்- பதிப்பாசிரியர் – ஜெ.மோகன் – பதிப்பு- சிவாலயம் (2011) 

எஸ் முத்தையா எழுதிய Madras Rediscovered ( ஆங்கிலம்) 1981 பதிப்பு – Westland publication- சென்னை 

ஈஸ்வர சரண் எழுதிய புனித தாமஸ் புனைவும் மயிலாப்பூர் சிவன் கோயிலும் – நான்காம் பதிப்பு -1991 – ஆங்கில நூல் -வெளியீடு வாய்ஸ் ஆப் இந்தியா – தில்லி தமிழ் மொழியில் இந்நூலை இத்தளத்தில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம் :

எம். சுப்பிரமணிய பிள்ளை எழுதிய சென்னை மாவட்ட கோவில் வரலாறு – 1964 – தமிழ் நூல்-  வெளியீடு – தமிழ்நாடு மாநில அரசு.


அடிக்குறிப்புகள். :- 

1.

  1.  https://www.thehindu.com/news/cities/chennai/madras-week-2019-know-your-chennai/article29220752.ece                    
  2.   https://www.dnaindia.com/india/report-madras-day-chennai-turns-380-years-old-2783964

2. Madras Rediscovered page 261

3. மயிலாப்பூர் சிவன் கோவிலின்

http://www.mylaikapaleeswarar.tnhrce.in/history.html

 அதிகாரப்பூர்வ வலைதளம் – பார்வையிட்டது 24 மே 2020

4. திருமயிலைத் தலபுராணம் பக்கம் 14

5. திருமயிலைத் தலபுராணம் பக்கம் 30-35

6. Shaivam.org 

7. கபாலீஸ்வரர் கோவில் அதிகாரப்பூர்வ வலைதளம் பார்வையிட்டது 24 மே 2020

8.   History of Portuguese in Madras –

பார்வையிட்டது 11 ஜூன் 2020.

9.  http://www.raremaps.com/gallery/detail/44194/chennai- the-environs-of-madras-surveyed-in-1814-latitu-faden 

பார்வையிட்டது 5 ஜூன் 2020 

10.  திருமயிலை தல புராணம் பக்கம் 432

11.  சென்னை மாவட்ட கோவில் வரலாறு  பக்கம் 92

12.   https://m.rediff.com/news/2006/nov/22pope.htm?src=whatsapp&pos=news 

         பார்வையிட்டது 29 மே 2020

13. புனித தோமா புனைவும் மயிலாப்பூர் சிவன் கோயிலும் பார்வையிட்டது 29 மே 2020

http://self.gutenberg.org/eBooks/WPLBN0100302195-The-Myth-of-Saint-Thomas- and-the-Mylapore-Shiva-Temple–Fourth-Revised-Edition-by-Sharan-Ishwar.aspx? https://www.scribd.com/doc/42008956/Indiavil-Saint-Thomas-Kattukkatai-Veda-Prakash

அ. இந்நூலின் அறிமுக உரையில் முனைவர் கொயன்ராட் எல்ஸ்ட் :

தூய தோமா வின் வாழ்க்கை வரலாற்று நூலை பற்றியோ அதில் குறிப்பிடப்பட்டுள்ள அவரது சமூக விரோத செயல்களை பற்றியோ நாம் இங்கு விவாதிக்கவில்லை. இங்கு குறிப்பிட விரும்புவது, அந்த நூலில் இந்திய துணைக்கண்டம் பற்றிய குறிப்போ விவரங்களரே  இல்லை. மாறாக அவர் பாலஸ்தீனத்திற்கு கிழக்கே பயணம் செய்தார். அங்கு பாலைவன பிரதேசமும் அங்கிருந்த ‘மாஸ்டி’ ( சௌராஷ்டிரர்கள்) மக்களை பற்றியும் பாரசீக பெயர்கள் இருந்தது பற்றியும் குறிப்பிட்டுள்ளார். சர்வ நிச்சயமாக அது பசுமையும் செழுமையும் கொண்ட கேரளம் இல்லை. அவர் தென்னிந்திய பகுதிக்கு வந்ததாக சான்றுகள் இல்லை என்பது மட்டுமன்றி எவரும் அவர் வந்ததாக எழுதி இருக்க வில்லை (பக்கம் 13)

தோமா தென்னிந்தியாவிற்கு வந்து வாழ்ந்ததாக கூறுவது தவறு. அவரை பிராமணர்கள் கொன்றதாக கூறுவது தெரிந்தே செய்யும் தவறு. ‘பி ரூமி’ ( Be ruhme) என்றால் குத்தீட்டி என்று பொருள். அதை ‘ பிராம்ம’ என்று திரித்து குழப்பம் செய்யப்பட்டுள்ளது. அகதிகளின் தலைவனை கொலை செய்தவர்கள் என்று இந்துக்கள் முகத்தில் கரி பூசுவது தஞ்சம் அளித்த ஹிந்துக்களுக்கு கிறிஸ்தவர்கள் காட்டும் நன்றி இதுவா. இந்திய ஆயர்களுக்கு (பிஷப்) மான உணர்வு இருந்தால் அவர்களாகவே இந்த கட்டுக்கதைகளையும் நினைவு சின்னங்களையும் அகற்றுவது மட்டுமன்றி சிவன் கோவிலை தகர்த்து கட்டப்பட்ட, தோமா கல்லறையையும் அதன் மீது கட்டப்பட்டுள்ள சாந்தோம் தேவாலயத்தில் விட்டுவிடவேண்டும்.( பக்கம் 14)

ஆ. ஈஸ்வர சரண்- அத்தியாயம் 10

பேராசிரியர் ஜார்ல்  சார்பெண்ட்டியர் எழுதியுள்ள ‘தூய தோமாவும் இந்தியாவும்’ என்ற நூலில்,  ‘நம் தேவனின் சீடர். – அவர் பெயர் தோமா அல்லது வேறு எதுவோ- தென்னிந்தியாவுக்கும் இலங்கைக்கும் சென்றதாகவோ அங்கு கிறிஸ்தவ சமயத்தை பரப்பியதாகவோ எந்த சான்றும் இல்லை ‘. 

அதே நூலின் குறிப்பு – 37

பதினாறாம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியர்கள் கட்டிய தேவாலயத்தை பத்தொன்பதாம் நூற்றாண்டில் புதுப்பித்துக் கட்டினர். தேவாலயமும் அதை அடுத்துள்ள ஆயரின் இருப்பிடமும் முன்பு அங்கிருந்த கபாலீஸ்வரர் கோவிலை தகர்த்து அதே இடத்தில் எழுப்பப்பட்டது. அங்கு தூய தோமாவின் சமாதியும் நினைவுப் பொருட்களாக இத்தாலியிலுள்ள ஆர்த்தோனா- வில் இருந்து கொண்டு வரப்பட்ட அவரது கை எலும்பு மற்றும் அவரை கொன்ற ஈட்டியும் வைக்கப்பட்டுள்ளன. புனித தோமா வுடன்  தொடர்புடையதாக சென்னையில் மயிலாப்பூர் லஸ் தேவாலயம், சைதாப்பேட்டை சின்னமலையில் உள்ள ஆரோக்கிய மாதா தேவாலயம், பரங்கிமலையில் உள்ள மகப்பேறு மாதா தேவாலயங்கள் உள்ளன.( பக்கம் 83)

இ. ஈஸ்வர சரண் – அத்தியாயம் 16

சிவன் கோவில் மயிலாப்பூர் கடலோரத்தில் இருந்ததற்கு சான்று சைவ மகான்களின் தமிழ் பாடல்களில் உள்ளது. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த காஞ்சி இளவரசர் ஐயடிகள் காடவர்கோன் நாயனார், ஆறாம் நூற்றாண்டை சேர்ந்த ஞானசம்பந்தர், பதினைந்தாம் நூற்றாண்டை சேர்ந்த அருணகிரிநாதர் ஆகியோர் தங்கள் பாடல்களில் கபாலீஸ்வரர் கோவில் கடலோரத்தில் இருந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

பசுமையான தென்னை மரச் சோலைகள் கொண்ட மயிலாப்பூரில் மாசி மாத பௌர்ணமி நிலவில் பக்தர்கள் கடலில் புனித நீராடுவதை கபாலீஸ்வரத்தில்  அமர்ந்து சிவபெருமான் மகிழ்வுடன் கண்டருளுகிறார் என்று ஞானசம்பந்தர் எழுதியுள்ளார்.

ஞானசம்பந்தருக்கு  ஒன்பது நூற்றாண்டுகளுக்கு பிறகு, போர்ச்சுகீசியர்கள் வருவதற்கு ஒரு நூற்றாண்டு முன்பு, வாழ்ந்த  மகான் அருணகிரிநாதர், ‘ அலைகடலோரம் அமைந்துள்ள மயிலாப்பூர் கோவிலில் வீற்றிருக்கும் எம் இறைவா……’  என்று பாடுகிறார்.

” கயிலைப் பதியரன் முருகோனே 

கடலக் கரைதிரை யருகே சூழ் 

மயிலைப் பதிதனில் உறைவோனே 

மகிமைக்கு அடியவர் பொருமாளே “

இரண்டு மகான்களின் பாடல்களில் இருந்து இறைவன் கடல் ஓரத்தில் அமர்ந்து உள்ளான் என்று தெரிகிறது. ஞானசம்பந்தர்  கடலில் நீராடும் பக்தர்களை கனிவுடன் பார்க்கிறான் என்பதிலிருந்து இறைவன் கிழக்கு நோக்கி அமர்ந்துள்ளார் என்று புரிகிறது. ஆனால் இன்று அப்படி இல்லை.

பதினேழாம் நூற்றாண்டில் விஜயநகர அரசர்கள் கட்டிய கோவிலில் இறைவன் மேற்கு நோக்கி அமர்ந்துள்ளார். கொடிமரமும் நந்தி தேவரும் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளன . ஆகம சாத்திரத்தின்படி  ஒரு கோவில் அதன் முந்தைய , அசலான, இடத்திலிருந்து மாற்றி வேறு இடத்தில் கட்டப்படுமானால் முந்தைய கோவில் இருந்த அதே திசையை நோக்கி கட்டப்பட கூடாது, என்கிறது (பக்கம் 108).


Dr. Sharda Narayanan  , Translation by T. Ravikumar
Dr. Sharda Narayanan , Translation by T. Ravikumar

3 thoughts on “மயிலாப்பூர் இதிகாசம்”

  1. Pingback: ThiruMayilai : The Itihasa of Mylapore - INTELLECTUAL KSHATRIYA

  2. I u don’t mind i request one information to u our madras sanskrit college is also the very oldest institution many scholars are in our oldest traditional inventers are studied u can add information about this in your future

    1. Super researched article. Kindly publish this as a book. Great service to history . Vedhapuriswarar temple Pondy demolition is clearly documented in Anatharangam Pillai dairy .

      Thank you very much for this compilation.

Leave a Reply

%d bloggers like this: